மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்  பேரூராட்சி இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் கோவில்பட்டி சுகாதார மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து ஒருங்கிணைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ‘போஷாண் அபியான்’ தேசிய ஊட்டச்சத்து மாதிரி  விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். மற்றும் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம் வழங்கினார். மற்றும் புற்று நோய்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். அருகில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.


‘போஷாண் அபியான்’ தேசிய ஊட்டச்சத்து மாதிரி  விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட போது

தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம் வழங்கிய போது

புற்று நோய்களுக்கான அடையாள அட்டையை வழங்கிய போது