மன உளைச்சலில் செவிலியர் தற்கொலை..!

மதுரை அடுத்த பரவையைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது உறவு பெண்ணிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை உறவினர்களிடம் காட்டுவதற்கு உதவி செவிலியர் கார்த்திகா ரூ.1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் கார்த்திகா லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி மருத்துவமனை முதல்வர், கார்த்திகாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.