மநீம,பாஜகவுடன் கூட்டணியா? கமலஹாசன் பரபரப்பு பேட்டி!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமலஹாசன், நல்லவர்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்றார்.

மேலும், நல்லவர்கள் எங்களுடன் கூட்டணி அமைக்க வருவார்கள். நல்லவர்கள் மூன்றாவது அணிக்கு வரவேண்டும். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம் என்றார்.

ரஜினி குறித்த கேள்விக்கு, ரஜினிக்கு அரசியலை விடஉடல் நலம் ரொம்ப முக்கியம். அரசியல் பற்றி ரஜினிதான் முடிவெடுக்க வேண்டும் என பதிலளித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளனர். சட்டசபையில் மநீம உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும் எனவும், எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று வேட்புமனு தாக்கலின் போது தெரியும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *