மணிரத்னம் உட்பட 49 பேர் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு.

வட மாநிலங்களில் மத ரீதியிலான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி மணிரத்னம், உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.  இந்த கடிதம், ‛‛நாட்டின் ஒற்றுமையை களங்கப்படுத்தும் விதமாகவும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பது போல உள்ளதாகவும், மோடியின் மதிப்பை குறைப்பது போன்றும் உள்ளது” என கூறி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசாபர்நகரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, சம்பந்தப்பட்ட 49 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முசாபர்நகர் போலீசார் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு, மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *