மகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசிய தந்தை

பனஸ்கந்தாவைச் சேர்ந்த சிறுமியான அசர்வாவை, 35 வயது வாலிபரான கோவிந்த் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அந்த சிறுமியை கோவிந்த்திடமிருந்து மீட்ட காவல்துறையினர் விசாரணையை நடத்திய போது சிறுமியை திருமணம் செய்தவர் அவரது தந்தையைவிட வயது மூத்தவர் என்றும், அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் தவணை முறையாக கொடுக்க கோவிந்த் ஒப்பந்தம் செய்துகொண்டு திருமணம் செய்துள்ளார். சிறுமியை திருமணத்துக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் முகவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஹதாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.