போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி மாணவர் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சென்னை ஐ.ஐ.டியில் தங்கி முதுகலை இயற்பியல் பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் ஜேக்கப் லிண்டெதல் ‘WE HAVE BEEN THERE’ 1933-1945 என்று எழுதப்பட்ட பதாகையை தன்னுடைய கையில் ஏந்தி குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அன்றைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு ஒப்பிட்டு மறைமுகமாக அவர் விமர்சித்தாக கூறப்படுகிறது. இதனால் ஐஐடியிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார். மாணவர் விசாவில் படிக்க வந்திருப்பதால் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ஜெர்மனி மாணவர் ஜேக்கப் லிண்டெதல், “குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்தது என குடியுரிமைத்துறை அதிகாரிகள் கூறிதான் எனக்கு தெரியவந்தது.நான் மன்னிப்பு கோரியும் அவர்கள் ஏற்காமல் என்னை நாட்டைவிட்டு வெளியேற கூறிவிட்டனர்” எனக்கூறினார்.