பொது இடத்தில் இளைஞர் வெட்டிக் கொலை – காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகனின் 3ஆவது மகன் சதீஸ்குமார். இவர் பழைய கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது இரு சக்கரவாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்தப்போது காரில் வந்த அவரை வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த வழியில் இருந்த பேருந்தில் ஏறியுள்ளார். ஆனாலும் விடாமல் அந்த கும்பல் அவரைப் பேருந்தில் வைத்தே வெட்டியுள்ளது. இதையடுத்து உயிருக்கு போராடிய அவரை காப்பாற்ற அந்த பேருந்திலேயே மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல, வழியிலேயே அவர் இறந்துள்ளார்.இது தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் சதிஷ்குமாருக்கு சொத்து விஷயமாக பங்காளிக் குடும்பத்தோடு பிரச்சனை உள்ளதாகவும் மேலும் சதிஷ் மீது இதற்கு முன்பே இருமுறைகொலை முயற்சி செய்யப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.