பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் – தோழி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் செயல்பட 70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்ற முறை குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் மனநல மருத்துவர் ஷாலினி பயிற்சி அளித்தார். மற்றும் தோழி திட்டத்திற்காக செயல்படும் பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது.