பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் குறித்து சிறப்புரை – தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் பாதுகாப்பிற்கான சட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி(தன்னாட்சி)யின் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஏ.எஸ்.ஜெ லூசியா ரோஸ் அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். இளங்கலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.