புதிய 1000 ரூபாய் நோட்டுகள் – எச்சரிக்கை

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பக்கங்களில் பல நாட்களாக சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி போலி என மறுத்துள்ளது. வலைதளங்களில் பரவும் இந்த செய்தி போலியானவை அத்துடன் இந்த ரூபாய் நோட்டில் ஆளுநர் கையெழுத்திடும் இடத்தில் மகாத்மா காந்தியின் கையெழுத்து உள்ளது. இது கற்பனையானது என்று அந்த நோட்டில் குறிப்பிட்டுள்ளது. இதை பொதுமக்கள் யாருக்கும் பகிர வேண்டாம். ஒருவேளை இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டால் போலி ரூபாய் நோட்டுகள் உருவாக வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.