புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – இஸ்ரோ தலைவர் சிவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்ட குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் தெற்கு நோக்கி ராக்கெட் ஏவ வேண்டும் என்றால் ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ராக்கெட் ஏவ முடியாது என்பதால், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மற்றும் குலசேகரபட்டினம் நெல்லை மாவட்ட மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஏவுதளம் அமைக்க தூத்துக்குடியில் 2300 ஏக்கர் தேவைப்படும் எனவும், இந்த ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவைவிட சிறியதாக இருக்கும் எனவும் கூறினார்