பாம்பனில் புதிய இரயில் பாலம்

கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது. அதில் தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் இந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்து 83 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வு செய்யப்பட்டு பூமி பூஜையுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.