நீதிமன்ற பெண் ஊழியருக்கு கரோனா தொற்று : சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்ற பெண் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த நீதிமன்றத்தில் பணி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த 4 பேரை வட்டாட்சியா் மணிகண்டன், துணை வட்டாட்சியா் அறிவழகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் நேற்று அவா்களது வீடுகளுக்கு சென்று அவா்களின் ரத்தத்தை மருத்துவக் குழுவினா் சேகரித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், அவா்களை வீட்டில் தனிமையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.