நிரம்பிய மேட்டூர் அணை : மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேட்டூர்: நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளதால் அதில் பயன் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர் .மேட்டூர் அணை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பின் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து சற்று குறைந்து அணையின் நீர்மட்டம் 119 அடியானது. 
இதனிடையே தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மேட்டூருக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 10,409 கன அடி ஆகவும், டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வெளியேறும் நீர் 22 ஆயிரம் கனஅடியாக உள்ளது . மேலும் 16 கண் மதகு வழியாக  7 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *