நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறதா? காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு…

கும்பல் கொலைகள் அரங்கேறுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது சம்பந்தமாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில், ‘2-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் சர்வாதிகார செயல்கள் தென்படுகின்றன. நாடு எதை நோக்கி செல்கிறது? இது குறித்து மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக தேசியவாத அரசியல் கட்சிகள் கூட்டாக போராடவில்லை என்றால், சர்வாதிகார அடையாளங்கள், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்துவிடும்’ என்று கூறினார். காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அதே நாளில், கோட்சேவை வாழ்த்தும் பதிவுகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.