நடைமுறைக்கு வந்த மெடிகால் திட்டம் – திருவண்ணாமலை

தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே பெருங்கட்டூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர்களுக்கு வீட்டிற்கு சென்று இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 24×7 மணி நேரமும் செயல்படும் வகையில் 8925123450 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் “மெடிகால்” என்ற புதிய திட்டத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று செய்யாறில் துவக்கி வைத்தார்.