தொடரும் பாலியல் தொல்லைகள் – கைதான அரசு பேருந்து நடத்துனர்

கும்பகோணம் அருகே ஓடும் அரசு பேருந்தில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக , நடத்துநர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். 
சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் சித்த மருத்துவர் ஒருவர், சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து கும்பகோணம் அருகே சென்ற போது நடத்துநர் ராஜூ, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். பின்பு கும்பகோணம் காவல் நிலையத்தில் நடத்துநர் ராஜூ மீது புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். 
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவருவதால் குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டிய தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.