தொடரும் அய்யாக்கண்ணு-ன் அதிரடி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு குறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “சிறு, குறு விவசாயிகள் என்று இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மற்றும் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் காவிரி ஆற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும். எனவே நதிகளை இணைக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21ந் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதில், எலிக்கறி, பாம்புக்கறி தின்றும், விவசாயிகள் மனைவிகளின் தாலியை அறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.