தேர்வில் பீட் அடிப்பதற்கு அட்டை பெட்டி மூலம் காவல்

ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்வு அறையில் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்வதை தடுக்க கல்லூரி நிர்வாகம் தற்போது நடக்கும் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தலையிலும் அட்டைப்பெட்டியை மாட்டியுள்ளனர். இதனைக்கண்டித்து தான் மாணவர் ஒருவர் சமூகவலைதளத்தில் அதனை கல்லூரி நிர்வாகத்தின் பில்லியன் டாலர் ஐடியாவை பாருங்கள் எனக் கூறி கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். இதுபோன்ற மீண்டும் நடந்தால் கல்லூரி உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.