தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி – பேட்டி

ஊரடங்கு அமலில் உள்ள 17-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வரும் 6ம் தேதி முதல் இயங்கும் ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பேட்டி.

கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது. வரும், 28 வரை நீடிக்கும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது. ‘அக்னி நட்சத்திர காலத்தில், மற்ற நாட்களை விட, வெயில் அதிகரிக்கும் என, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கூறப்படுகிறது. அதன்படியே, இந்த காலத்தில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் இன்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : தொழிற்சாலைகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து 50% பணியாளர்களுடன் செயல்படலாம். கட்டிட பணியை மேற்கொள்ள  அனுமதி அளிக்கப்பட்டாலும் கட்டிட பணிக்கு செல்பவர்கள் ஒரு தடவை மட்டும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.  எலக்ட்ரிஷன் பிளம்பர் என சுய வேலை செய்பவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அனுமதி வழங்கப்படும் அவர்களது அனுமதி பெற்று பணிக்கு செல்லலாம் என்று அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயை பரவலை தடுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை தவிப்பதற்காக இந்த அனுமதி வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். தனியாக உள்ள கடைகள் திறக்கலாம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும், இவை அனைத்திற்கும் அந்த நிறுவன உரிமையாளரே பொறுப்பு ஆவர், இவைகள் மீறப்பட்டால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் 8200 பேரில் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மாநில அரசின் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல  திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை, நிரந்தர இடம் பெயர்வு போன்ற காரணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றார். சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்துள்ள 4126 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட உள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து அனுமதியின்றி வருபவர்களை தனிமை படுத்துவதற்காக கோவில்பட்டி, எட்டயாபுரம், வெம்பார் பகுதிகளில் தலா 100 படுக்கைகள் தயாராக உள்ளன,தூத்துக்குடி மாநகராட்சியில் 200படுக்கைகள் தயாராக உள்ளன என்றார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து கொரோனா தொற்று உள்ள சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை வணிக வளாகங்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளன. கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்கிய நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாலைகளில் சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. அவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.