தூத்துக்குடியில் சலூன் கடைகள் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 55 நாட்களுக்கு பின்னர் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கரோனா ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைகளைத் திறக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, ஊரக பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கவும், பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி சலூன்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

கடைகளுக்கு வருபர்களுக்கு கிருமி நாசினி தடுப்பு மருந்து வழங்குகின்றனர். மேலும் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே முடிதிருத்தம் செய்கின்றனர். ஒவ்வொருக்கும் தனிதனி துணிகளை மட்டுமே பயன்படுத்தி முடிதிருத்தம் செய்து வருகின்றனர். சில கிராமங்களில் வீடுகள் அருகே முடித்திருத்தம் பணிகளை முடிதிருத்துவோர் மேற்கொண்டு வருகின்றனர். 55 நாளுக்குப் பின்னர் தங்களுக்கு அரசு அனுமதித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசின் நிபந்தனைகளைப் பின்பற்றி முடி திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஊரக பகுதிக்கு அனுமதி வழங்கியது போன்று, நகரப் பகுதியிலும் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.