திருநங்கையை திருமணம் செய்த இளைஞர்- மதுரை

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோவிலை சேர்ந்த பஷீர் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பஷீர் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கியை கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். தற்போது அவர் காதலித்த கல்கியை அப்பகுதியிலுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது பஷீர் தன்னுடைய குடும்பத்தினர் அச்சுறுத்துவதாகவும், தங்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி கல்கியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு  தஞ்சம் அடைந்துள்ளார்.