தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 123 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறை பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 123

பணி : உதவிப் பொறியாளர் (Civil, Mechanical, Electrical, Computer)

காலிப் பணியிடம் : 23

ஊதியம் : மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்

பணி : உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 100

ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.65,500 வரையில்

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No 12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010