தமிழக அரசின் இணையதள திட்டம்

தற்போதைய காலத்தில் தொழில்நுட்ப உலகில் இணைய சேவை மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றாகவே இருக்கின்றது. இப்போதெல்லாம் தகவல்களை முழுமையாகவும் உடனுக்குடன் பெறவும் மக்கள் இணையத்தையே நாடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் 1,815 கோடி செலவில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அதிவேக இணைய சேவையை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.