தமிழகம் வருகிறார் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தூத்துக்குடி: தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார்.தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியார் 98-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளார்.தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், அதற்கு பிறகு முதன்முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.