தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான 3 மாதம் பயிற்சிக்கு சிவில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி: மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: விண்ணப்பதாரரின் வயது 50க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் & கட்டணம் : இதற்கான பயிற்சிக் காலம் 3 மாதம். 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சியை நிறைவுற்ற பின் நிலஅளவு செய்வதற்கான உரிமம் பெறலாம்.