பாளையங்கோட்டை அருகே உள்ள பள்ளி மாணவர்கள் கைகளில் ஜாதி ரீதியாகக் கயிறுகளைக் கட்டுவது குறித்து பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர், அங்கிருந்த அனைத்து மாணவர்களையும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மற்றும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் காவல்துறையினர் தகவல் அளித்துக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். மாணவர்களின் செயலைத் தண்டிக்கும் பற்றத்தில் அனைத்து மாணவர்களையும் திருக்குறள் புத்தகத்தில் உள்ள 1330 குறளையும் காவல்துறை வளாகத்திலேயே அமர்ந்து எழுதிக் காட்டிவிட்டுச் செல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். மாணவர்களை அடிக்காமல், திட்டாமல் காவல் துறையினர் மாணவர்களுக்கு அளித்த இந்த தண்டனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
