சுகாதாரப் பணியாளர்கள் நல வாரிய நிவாரண தொகை : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், (தாட்கோ) திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் (SWB) 2008ம் ஆண்டில், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 772 நபர்கள் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், தற்போது பணிபுரிந்து வந்தாலும் ஒய்வு பெற்றிருந்தாலும், தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட கொரோனா (ஊரடங்கு) நிவாரணநிதி பெற தகுதியுடையவர்கள். சுகாதாரப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் பதிவேட்டில் அவர்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கி கிளை, IFSC எண் போன்ற விபரங்கள் இல்லாததால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து, வங்கி கணக்கு எண்கள் பெறப்பட்டு அவர்களது சேமிப்பு கணக்கில் நிவாரண தொகை ரூ.1000/- செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பணியில் இருந்தாலும் அல்லது ஒய்வு பெற்றிருந்தாலும், தங்களது உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கிகிளை, மற்றும் IFSC எண் ஆகிய விபரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவோ,அல்லது dmtahdcotkd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9445029532 என்ற எண்ணிற்று வாட்ஸ் அப் மூலமாகவோ, தெரிவித்து நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.