கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை மகன், குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல்: கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான வியாபாரிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை தாக்கியதால் இறந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் திமுக சார்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார் இதைத் தொடர்ந்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை அவர்களின் குடும்பத்தினரிடம் கனிமொழி எம்பி நேரில் வழங்கினார் இந்தநிலையில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரிகளின் வீட்டுக்கு வருகை தந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்
இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் உள்ளிட்டோர் இருந்தனர்