சந்திராயன் 3 திட்டம் – இஸ்ரோ

 நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. 

தற்போது சந்திராயன் 3 திட்டம் தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.