கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து – மாணவர்கள் பரிதாபமாக பலி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா நாளை தொடங்குகிறது. தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த மாணவர்கள் மணி சங்கர் மற்றும் அஜித் உட்பட நண்பர்கள் ஆறு பேர் மாலை அணிவிப்பதற்காக தூத்துக்குடியிலிருந்து குலசேகரப்பட்டினத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆறுமுகநேரி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரியில் அஜித், மணிசங்கர் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் அஜித் மற்றும் மணிசங்கர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஆறுமுகநேரி போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தசராதிருவிழாவிற்கு மாலை அணிந்து விரதம் இருக்க வந்த நேரத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *