கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு : நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி

தூத்துக்குடி மாவட்டம்: நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நான்காம் ஆண்டு மாணவர்கள் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரதிகளை நாசரேத் பேருந்து நிலையம், பேருந்துகளில் உள்ள பயணிகள், நாசரேத் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரதிகளை வழங்கினர்.

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமையில் முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.