கொரானா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரானா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், வாடகை டாக்ஸி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவத் துறை அலுவலர்கள் கொரானோகாய்ச்சல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆட்சியர் விளக்கமாக எடுத்துக் கூறினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் திரு அமீர்த் இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜுத் காலோன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.திருவாசகம் இணை இயக்குனர் மருத்துவ நலப்பணிகள் மரு.பரிதாசெரின், தூத்துக்குடி துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு. கிருஷ்ண லீலா, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி விஜயா (கோவில்பட்டி), செல்வி.தன பிரியா (திருச்செந்தூர்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திருமதி உமா சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.ஸ்ரீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.