குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற மறியலில் ஈடுபட முயன்ற 36 மாணவர்கள் கைது – திருச்சி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் சட்டத்தை எதிர்த்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 3 மாணவிகள் உள்பட மொத்தம் 36 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் மோகன்குமார் தலைமை வகித்தார்.