குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி முறையான அனுமதியின்றி போராட்டம் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எஸ்.வைத்தியநாதன் அமர்வு நீதிபதிகள், திமுக பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டனர்.
