காரில் நிர்வாண கோலத்தில் மீட்க்கப்பட்ட காதல் ஜோடியின் சடலம் – சேலம்

சேலத்தில் உள்ள செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். காலையில் கல்லூரிக்கு சென்ற சுரேஷ் மாலை வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், கோபிக்கு சொந்தமான கார் நிறுத்தும் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நிர்வாணமாக சுரேஷின் சடலமும் இளம்பெண் ஒருவரின் சடலமும் இருப்பதாக தகவல் கிடைத்தது. 
உடனே சம்பவ இடத்துக்குசென்று சடலத்தை காவல் துறையினர் மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், அந்த பெண், அப்பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவிண் என்பவரின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காதலித்ததாகவும், அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது மூச்சு அடைத்து உயிரிழந்தார்களா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்