காய்கறி சந்தைகளில் நடத்திய ஆய்வில் டன் கணக்கில் பறிமுதல் செய்த அதிகாரிகள் – சென்னை

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சுமார் 75 கடைகளில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில், 2 கடைகளில் தெளிப்பான்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் வாழைப்பழங்களைப் பறிமுதல் செய்தனர். அதே போல, ரசாயனங்களின் உதவியுடன் செயற்கை நிறங்களை பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 10கிலோ பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளையும் பறிமுதல் செய்தனர். பின்பு, உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்திய கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கினார்கள்.