கல்யாணமான இரண்டே நாளில் கர்ப்பம்- தமிழக பிஜேபி பிரமுகர் செய்த செயல்

சிவகங்கையைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண் லீலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என இருவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி கல்யாணம் நடந்துள்ளது. புதுப்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதித்ததில் அப்பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது
சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் ‘குட்மேனஸ்’ என்ற தனியார் நா்சிங் கல்லூரியின் தாளாளர், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜ் அந்த மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் அதிகமாக உள்ளீட்டு மதிப்பெண் தருவதாகக் கூறி பலவந்தமாக பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மற்றும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். அவரின் இந்த செயல் மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்த பிறகு, இதுகுறித்து சிவகங்கை மகளிர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார், அதன் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.