கட்சிக்காரர்களை ஓட விட்ட இளைஞர்கள் – நாங்குநேரி

நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் என்ற பகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதாக வந்த தகவல் கிடைத்த அந்தப் பகுதி இளைஞர்கள் அவர்களை பிடிக்க சென்றனர்.
அப்போது பணம் கொடுக்க வந்த கட்சிக்காரர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர். அவர்களை இளைஞர்கள் துரத்தியபோது அவர்கள் கையில் வைத்திருந்த ரூ.2000 நோட்டுக்கள் சாலையில் சிதறியதை கூட பொருட்பேடுத்தாமல் கட்சிக்காரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். பின்பு அங்கு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ரூபாயை பறிமுதல் செய்த இளைஞர்கள் அதனை போலீசில் ஒப்படைத்தனர். மற்றும் தப்பிச்செல்ல முயன்ற கட்சிக்காரர்களையும் பிடித்து போலீசில் அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார்களும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதால் அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.