கடலூர் அருகே ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்…

கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவத்தில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி, கடலூர் அருகே சக ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தை சேர்ந்த தினேஷ் குமார், கடலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் 12ம் வகுப்பு படித்தார். இந்நிலையில் தனக்கு கடந்த ஆண்டு இலவச மடிக்கணினி வழங்கவில்லை என பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். அப்போது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சந்திர மோகன் மாணவன் தினேஷ் குமாரை தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சந்திர மோகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆசிரியர் சந்திர மோகனை விடுதலை செய்ய வலியுறுத்தி, தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.