ஒரே நாளில் 300 கோடி போலி பேஸ்புக் ஐடி நீக்கம்

போலி கணக்குகளில் இருந்து பதிவிடப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தால் தரவுகள் மற்றும் போலி கணக்குகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவர் குறிப்பிட்டிருந்தது போல், தற்போது ஆக்டிவாக இருக்கும் கணக்குகளில் 300 கோடி போலி கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. நீக்கப்பட்ட போலி கணக்குகளில் சுமார் 240 கோடிக்கும் மேலான கணக்குகள் உண்மையிலேயே போலியான கணக்குகளாக கருதப்படுகிறது. அடுத்ததாக ஆபாசமான பதிவுகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் ஆபாசம் நிறைந்த தகவல்கள் விரைவில் நீக்கப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் சமூக வலைதளங்களில் இருக்கும் சுதந்திரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது போல் பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.