“ஒரே நாடு ஒரே ரேஷன்”

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2020ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்” நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அதன்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுவதின் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இத்திட்டம் புலம்பெயர்ந்த பயனாளிகளான தொழிலாளர்கள், தினசரி கூலிகள், வேலை தேடி வேறு இடத்திற்கு செல்லுவோர்க்ளுக்கு பயனளிக்கும் என நம்பப்படுகிறது.