ஊரடங்கு தளர்வில் சில நிபந்தனைகளுடன் திறக்கபட்ட டீ கடைகள்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு தடை பிறப்பிக்கபட்டது. தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு டீ கடைகள் நேற்று திறக்கப்பட்டன. டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று பூக்கடைகள், பழக்கடைகள், சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் திறந்து இருக்கிறது. தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அதே நேரத்தில் கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பொதுவெளியில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறையினர், அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.