உள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் கைப்பற்றல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ளது ஒப்பந்தகாரர் தர்மலிங்கத்தின் வீட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனையில் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் சிக்கிய தர்மலிங்கத்தின் மனைவி ராணியம்மாள் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டல மாணிக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், அவரது மகன் பாலு அதே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.