இன்ஸ்டகிராமிலும் டிக்டாக் – புதிய அப்டேட்

தற்பொழுது டிக்டாக் செயலி மக்கள் மத்தியில் பல மடங்கு பாப்புலராக இருந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனைையை தொடங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும். இதன் மூலம் எக்ஸ்ப்ளோர் பகுதியில் உள்ள டாப் ரீல்ஸ் அம்சத்தில் பதிவை வைரலாக்க முடியும் என கூறப்படுகிறது. இதனை வெளியிடும் முன் இந்த அம்சத்தை அதிகளவு மேம்படுத்தும் பணிகளில் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.