இனி தமிழகத்தில் 37 மாவட்டங்கள்

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 32 மாவட்டங்கள் இருப்பினும் பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால், அவற்றை பிரிக்க வேண்டும் என மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.