இனி இவற்றில் நெட்ஃபிக்ஸ் இல்லை

மிகவும் பிரபலமான மீடியா ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃபிக்ஸ், டிசம்பர் 1 முதல் ஒரு சில சாதனங்களின் அதன் ஆதரவை நீக்கம் செய்ய இருக்கிறது. சில சாதனங்கள் மீது உள்ள “தொழில்நுட்ப வரம்பு” ஆதரவுகள் தான் இதற்கான முக்கிய காரணம் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது. இனிமேல் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்கள், மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களில் நெட்ஃபிக்ஸ் இல்லை. அதாவது சாம்சங் நிறுவனத்தின் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலிருந்து வெளியான அதன் ஸ்மார்ட் டிவி மாடல் எண் இல் திரை அளவிற்குப் பிறகு வரும் “சி(C)” அல்லது “டி(D)” என்ற சொற்களைக் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் நெட்ஃபிக்ஸ் ஆதரவு இனி கிடைக்காது என்று நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் இனி இந்த ரோகு பிளேயர்களுக்கும்,
ரோகு மீடியா பிளேயர்களில் ரோகு எக்ஸ்ஆர், எக்ஸ்டி, எஸ்டி, 2100 எக்ஸ், 2050 எக்ஸ் மற்றும் 2000 சி ஆகியவற்றிற்கும் நெட்ஃபிக்ஸ் ஆதரவு இனி கிடைக்காது. வரும் டிசம்பர் 1 முதல் நெட்ஃபிக்ஸ் ஆதரவு கிடைக்காத சாதனங்களில் முழு பட்டியலைக் காண இந்த லிங்க் netflix.com/compatibledevices கிளிக் செய்யுங்கள்.