118 தனிமங்களை மனப்பாடம் செய்து அசத்துகிறார் தாம்பரம் அருகே உள்ள, முடிச்சூரைச் சேர்ந்த, 4 வயது சிறுமி உதிதா. இது குறித்து அவர் தந்தை அளித்த பேட்டியில் எனது மனைவி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக வேதியியல் பாடப்பிரிவில் உள்ள, 118 தனிமங்களின் பெயர்களை படித்துக் கொண்டிருக்கும் போது எனது மகள் உதிதாவும் சேர்ந்து, 80 தனிமங்கள் பெயரை அவ்வப்போது, சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு மீதமுள்ள, 38 தனிமங்களின் பெயர்கள், நம் நாட்டின் மாநிலங்கள், தலைநகரங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்களை கற்றுக் கொடுத்தோம். கற்றுக் கொடுத்த அனைத்தையும் மனப்பாடமாக, உதிதா கூற ஆரம்பித்தவுடன், அதனை உலகிற்கு தெரியப்படுத்த விரும்பி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ -ல் பங்கு பெற்று தற்போது, உதிதாவிற்கு “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் கிடைத்திருப்பதோடு “கூர்மையான அறிவுடைய குழந்தை’ எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
