இந்தியாவின் பசுமையை மொத்தமாக அழிக்கும் மத்திய அரசின் திட்டம்!! கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு, தமிழக எம்பி அன்புமணி கடிதம்!!

இந்தியாவில் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளை தளர்த்தி மத்திய அரசு சமீபத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், இந்த தளர்வுக்கு பல்வேறு சுற்று சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், கொரோனா அச்சம் விலகும் வரை கிடப்பில் போட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளை தளர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையை அதன் இப்போதைய வடிவத்தில் செயல்படுத்தினால், இந்தியாவின் பசுமைப் போர்வை மொத்தமாக அழிந்து விடும்; சுற்றுச்சூழலை முற்றிலுமாக அழித்து விடும்; இந்திய சுற்றுச்சூழல் மீது நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் வகையில் மிக மோசமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்திருக்கிறார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 12 ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டது. மே மாதம் 10 ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நாளை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை மீதான தமது கருத்துகளை விளக்கி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த தமது ஆலோசனைகளையும் அவர் தனி இணைப்பாக இணைத்துள்ளார். அதில், இந்தியா கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகளையும் கிடப்பில் போட வேண்டும்; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனைகள் இத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அவரது கடிதத்தின் விவரம் வருமாறு:

To
Shri. Prakash Javadekar
Minister of Environment, Forests and Climate Change
Indira Paryavaran Bhawan
Jor Bagh, New Delhi
Dear Sir,
Sub: Draft Environment Impact Assessment Notification, 2020 vide S.O. 1199(E) dated the 23rd March, 2020 – submitting suggestions – regarding
At the outset I wish to congratulate you for your efforts in bringing the Paris Agreement within the United Nations Framework Convention on Climate Change (UNFCCC), dealing with greenhouse-gas-emissions mitigation, adaptation, and finance, signed in 2016.
I am writing this letter to draw your attention regarding the Draft Environment Impact Assessment Notification, 2020 vide S.O. 1199(E) dated the 23rd March. This draft was published on the environment ministry’s website on March 12, 2020, just before Covid-19 cases started picking up in India. The World Health Organization (WHO) declared the outbreak a ‘Pandemic’ on March 11.
This notification contradicts our stand on greenhouse gas emission commitments. I wish to point out that at this moment; our country stands fourth in the world in greenhouse gases’ emission. India ranks 177 out of 180 in the Environmental Performance Index in 2018. It is a cause of worry that we have slipped 36 places in just a matter of 2 years since 2016. Hence our efforts should be to reduce emission, increase green cover and protect environment by enacting more stringent laws. As an environmentalist it pains my heart to note that the proposed Notification ignores these obligations and concerns and invalidates the purpose of the original Act.
The draft contains highly controversial clauses. The proposed Environment Impact Assessment Notification, instead of making efforts to protect nature with stringent rules and regulations is actually diluting the existing protective provisions. In the name of creating a congenial environment for industry, the Notification paves way for unhindered exploitation and destruction of our natural resources by private companies. On the excuse of relaxing norms, the amendments aim to remove the checks for preserving environment. Amendments such as removing the mandatory need for clearance from Green tribunal for Defence projects are highly dangerous, considering that the Government is opening defence sector to private companies.
The Notification needs extensive dialogue with all the stake holders, particularly with the various movements working to protect environment and the public who will be directly affected by the sweeping changes made in the rules.
Such discussions and dialogues are not possible in the current Covid 19 pandemic situation. Scientists have pointed out that the pandemic itself is due to environment degradation and is a warning to humanity that the planet is in a fragile state due to man-made factors. The Government of India and various state Governments have implemented lockdowns of different kinds. All gatherings are banned. That being the case, it is not possible to hold productive discussions regarding the proposed notification. This being a vital measure to protect environment and genuine apprehensions are expressed by various environmental agencies, organizations and scientists regarding the controversial clauses in the Notification, I submit that this exercise is postponed until the threat of Covid 19 pandemic abates and normalcy returns.
I strongly request that the Notification is kept in hold until the Government of India and various State Governments withdraw the lockdown completely. The draft should be subjected to examination by various stake holders and the Parliamentary Committee on Science & Technology, Environment & Forests before its implementation. The new Notification should include stringent clauses that prohibit exploitation of nature rather than removing existing restrictions.
The draft Environment Impact Assessment Notification, 2020 if implemented in its present form will grossly deplete our green cover and destroy the environment and produce long lasting negative impact on the country. Hence I reiterate that it should be subjected to scrutiny by various stake holders and the Parliamentary Committee for Science, Technology, Environment and Forests. Considering the Covid 19 Pandemic and the nationwide lockdown this should be kept in abeyance until normalcy returns.
I have received representations from several organizations working to protect environment. I submit their apprehensions and suggestions for amendments as attachment, for your kind perusal.
Thanking you,
(DR. ANBUMANI RAMADOSS)
29th June 2020

இவ்வாறு அன்புமணி எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.