ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 20, ஆம் ஆண்டு திருவிழா

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 20, ஆம் ஆண்டு திருவிழா நேற்று 29,08,19, மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது . திருவிழா செப்டம்பா் மாதம் 8 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது முன்னதாக ஆலய பங்குத் தந்தை ஜெரோசின் கற்றாா் செய்தியாளா்களை சந்தித்தாா் . அவா் கூறும் போது நாகப்பட்டினம் தூய வேளாங்கண்ணி மாதா பேராலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பொிய கொடியானது இந்த ஆண்டு கொடியேற்றத் திருவிழாவில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்க..அம்சமாகும் விழாவின் சிறப்பு நிகழ்சிக்களான செப்டம்பா் 1,ஆம் தேதி காலை புதுநன்மை தருவிழா அன்று மாலை திவ்ய நற்கருனை பவனி நகாின் தெருக்களில் நடைபெறுகிறது 7,09,19, சனிக்கிழமை திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது .8,09,19, ஞாயிறு காலை திருவிழா ஆடம்பரத் திருப்பலி பாளை மறைமாவட்ட மேதகு ஜீடு பால்ராஜ் தலைமையேற்று சிறப்பிக்கிறாா்கள் என்று பங்குத் தந்தை . ஜெரோசின்கற்றாா் தொிவித்தாா்கள் முதல் நாள் திருப்பலியில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீா் செல்வம் தலைமையில் . செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் .ஜீலியான்ஸ் மச்சாடோ மறையுரையாற்றினாா்கள் . விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் மற்றும் பங்கு தந்தை செய்திருந்தனா்